DecorationJPGfoodJPGkadaigalJPGParaiJPGReceptionJPGStageJPG

Our Tamil Isai Events

 

நம் தமிழ்மொழியினைப் போல, தமிழிசையென்பது நம்முடைய மிகப் பழமையான இசைச் செல்வமாகும். சங்கத்தமிழானது (அ) இயற்றமிழ், (ஆ) இசைத்தமிழ், (இ) நாடகத்தமிழென மூன்று வகையினதாய் தழைத்தோங்கி இருந்தமைக்கு எத்தனையோ செய்திகள் இருக்கின்றன. ஆனால் இன்று தமிழைத் தாய்மொழியாய் கொண்டவரில் கையளவினரே தமிழிசை என்று ஒன்று இருந்தமையை அதுவும் வெறும் ஏட்டளவிலேயே அறிந்திருக்கின்றனர் எனக் கூறின் அது மிகையான வழக்கல்ல.

இன்றைக்கு கர்நாடக சங்கீதம் என்று வழங்கப்படும் இசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. கர்நாடக சங்கீதத்தில் கூறப்படும் “சுரம்” என்ற சொல்லானது, பண்டைக் காலத்தில் அவை “அலகுகள்”  என்றும்,  ”மாத்திரைகள்” என்றும் அழைக்கப்பட்டன.  மேலும், பண்டைய தமிழ் ராகங்களும்  வடமொழியில் மாற்றம் செய்யப்பட்டன என்பது வரலாற்று உண்மை!

 

பண்டை நாளில் தமிழ்ப்பண்கள் பலவும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் ஐந்திணைகளை ஒட்டியும் பருவங்களை ஒட்டியுமே உருவாக்கப் பெற்றன.

 

ஒவ்வொரு வேளைக்கும் ஒரு பண்ணைக் கண்டான் தமிழன், ஆனால் அது எப்படி வழிக்கொழிந்து என்பதைக் கீழே காண்க :

 

 

பொழுது

பண்டைய தமிழ்ப் பண்

இன்றைய பண்

காலை

மருதப்பண்

கரகரப்பிரியா

மாலை

முல்லைப்பண்

அரிகாம்போதி

முன்னிரவு

நெய்தற்பண்

தோடி

பின்னிரவு

குறிஞ்சிப்பண்

நடபைரவி


இப்படி அறியாத பாட்டிற்கும் புரியாத இராகத்திற்கும் தலையாட்டிக் கொண்டிருந்த வாசிங்டன் தமிழ்ச் சங்க அன்பர்கள் ஒவவொரு மார்கழி மாதமும் தமிழிசையை நடத்துவது என முடிவு செய்து கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தமிழிசை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

 

அவை குறித்த செய்திகள் கீழ்க் கண்டவாறு:

நிகழ்ச்சி நடைபெற்ற

நாள்

முதன்மைப் பாடகர்

இசைக் கலைஞர்கள்

திசம்பர் 18, 2010

முனைவர். வழுதூர் மாணிக்கம்

நரம்பிசை: அருண் இராம மூர்த்தி

முழவு:செயந்த் பாலசுப்பிரமணியம்

சனவரி 7, 2011

இராதிகா இராசேசு

நரம்பிசை: பவானி

முழவு: விஜய கணேஷ்

திசம்பர் 16, 2012

முனைவர்.வைதேகி கண்ணன்

நரம்பிசை: பவானி

முழவு:விஜை கணேஷ்

திசம்பர் 14, 2013

திபா, திவ்யா சகோதரிகள்

நரம்பிசை: பாவனி

முழவு:விஜை கணேஷ்

ஒவ்வொரு தமிழிசை நிகழ்ச்சியிலும் நான்கு வயது முதல் பதினைந்து வயதுள்ள சற்றொப்ப 40-50 தமிழ்ச்சிறார்கள்  தமிழ்ப் பாடல்களையே பாடி அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டுள்ளனர்.

 

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், தம் வெள்ளி விழா (2012-ல் வாசிங்டனில் நடைபெற்ற) முதல் தமிழிசையை ஓர் தனி நிகழ்ச்சியாகவே நடத்துகின்றனர்.  இதில், அமெரிக்க மண்ணில் வாழும் பெரும்பாலன குழந்தைகள் கலந்து கொள்கிறார்கள் என்பதை எண்ணும் போது தமிழ் ஒரு போதும் செத்து விடாது என்பதற்கு சான்றன்றோ?


Promotions

NatureMills
http://harvardtamilchair.com/
AoPS Academy
aotax.com


mmtravels usa

To partner with Tamil Sangam, please contact 

president@WashingtonTamilSangam.org  

571-375-TSGW (8749)