DecorationJPGfoodJPGkadaigalJPGParaiJPGReceptionJPGStageJPG

Guidelines to "Thenral Mullai" Quarterly Magazine

 

நமது சங்கத்தின் தென்றல் முல்லை சித்திரை இதழுக்காக உறுப்பினர்களிடமிருந்து தரமான தமிழ்ப்படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. தங்கள் படைப்புகள் தமிழ் இலக்கியம், மொழி, வரலாறு, தமிழ்க்கல்வி, நடப்புச்செய்திகள், புலம்பெயர்ந்த அனுபவங்கள், உணவு, உடல்நலம் குறித்தவையாக இருக்கலாம். நல்ல சிறுகதை, கவிதை, கட்டுரைகள், மற்றும் சுவையான செய்திகள் வரவேற்கப்படுகின்றன. இளையோர் படைப்புகளுக்குத் தமிழ்ச்சங்கம் ஊக்கம் அளித்துப்பதிப்பிக்கும். ஆகவே ஓவியங்கள், சிறிய கதைகள், கட்டுரைகள் எழுத இளையோரை உற்சாகப்படுத்துங்கள். வாஷிங்டன்பகுதி வாழ் தமிழரிடையே தமிழ் எழுத்தாளர்களை இனங்கண்டு ஊக்கப்படுத்துவது தமிழ்ச்சங்கத்தின் நோக்கம். ஆகவேதங்கள் கருத்துகளைப் படைப்புகளாக உருவாக்கி எங்களுக்கு அனுப்புங்கள்.


தமிழில் எழுதுவது நம்மில் பலருக்கும் ஒரு சவாலாக இருக்கிறது; அதை விரும்பிச் செய்யுங்கள் –அதில் ஒரு தனிக்’காதலை’உணர்வீர்கள். “அமெரிக்கா வந்தாயிற்று; அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசும் குழந்தைகளும் வந்தாயிற்று; இன்னும் என்ன தமிழ், தமிழ் என்று...?” என்று யாராவது கேட்கும்போது என்றோ படித்த இந்த புதுக்கவிதையை நினைவு:


“வேலிக்கு வெளியே தலையை நீட்டிய
என் கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே....
மண்ணுக்கு அடியில் நீளும்
என் வேர்களை என்ன செய்வாய்?”

கிளைகளையும், இலைகளையும், பூக்களையும் எப்போதும் வியக்கும் நாம் வேரை மறக்கிறோம்;. வேரில்லாமல் கிளையாவது,இலையாவது? வேர்களின் மொழியிலேயே கொஞ்சம் பேசலாம்; வாருங்கள்

Please send all your contributions and enquiries to: thenral.mullai@gmail.com 

படைப்புகளை அனுப்பும் போது தங்கள் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடவும். அஞ்சல் வழியே அனுப்பினால், தங்கள் மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்பவும்.

கவனிக்க: தங்கள் படைப்பினை அனுப்பியபின் அது கிடைத்ததற்கான பதில் வரவில்லையெனில் உடனே இதழாசிரியரை (240) 821-3918 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


குறிப்பு: படைப்புகள் அச்சிடுவதற்கு உகந்தனவா என்று முடிவு செய்யும் உரிமை ஆசிரியர் குழுவிற்கு உண்டு

நன்றியுடன்,
தென்றல் முல்லை ஆசிரியர் குழு

Promotions

NatureMills
http://harvardtamilchair.com/
AoPS Academy
aotax.com


mmtravels usa

To partner with Tamil Sangam, please contact 

president@WashingtonTamilSangam.org  

571-375-TSGW (8749)